Sunday, December 4, 2011

லகம் முழுவதும் வசிக்கும் தமிழக மக்களே!
முல்லை பெரியார் அணை நமது உரிமை!!
அதனை மீட்பது நமது கடமை!!!


Sunday, September 18, 2011

காத்தலினா ரொபாயோவின் சீச்சி போட்டோ!

யையே! சீச்சீ!! பப்பி ஷேம்!!! போன்ற மேட்டருக்கு யாராவது ஒரே நாளில் பிரபலம் ஆக முடியுமா? ஆகி இருக்கின்றாரே கொலம்பியாவை சேர்ந்த (Catalina Robayo) காத்தலினா ரொபாயோ!

உலகம் முழுவதும் Miss Universe 2011 போட்டியின் முடிவை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்க, அனைத்து அழகிகளும் குரூப் போட்டோவிற்கு போஸ் கொடுக்கும்நேரத்தில், அப்பொழுது கால்மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்து போஸ் கொடுத்த நம் காத்தலினா ரொபாயோவை ஒரு போட்டோகிராபர் போட்டோ எடுக்க, பின்னர்தான் தெரிந்தது அம்மணி உள்ளே கீழாடை எதுவுமே (Panty) போடாமல் வந்து உட்கார்ந்துள்ளது. அம்மணிக்கு என்ன அவசரமோ அல்லது பிரபலமாகவேண்டிதான் தெரிந்தே இப்படி வந்து உட்கார்ந்தார்களோ அவர்களுக்குதான் தெரியும். ஆனால் அப்படி எல்லாம் இல்லை நான் Panty அணிந்தேதான் போஸ் கொடுத்தேன் என அம்மணி சார்பில் சொல்கிறார்கள். உலகம் முழுவதும் அவருடைய இந்த போட்டோ Facebook, Twitter, Blog என சில நொடிகளில் பிரபலமாகி விட்டது. அதைபார்க்காத நபர்கள் இந்த படத்தை பெரிசு செய்து பாருங்கள், அம்மணி சொல்வது நிஜமா அல்லது இந்த போட்டோ நிஜமா என்பது தெரியும். மொத்தத்தில் காத்தலினா ரொபாயோ உலகம் முழுவதும் புகழ்பெற்று “வடை எனக்குத்தான்” என நிரூபித்துவிட்டது நிஜம்.

Friday, July 30, 2010

ஷகீராவின் பாடல்

லகம் முழுவதும் உலக கால்பந்து போட்டி ஆரம்பமாகி, புதிது புதிதாக கால்பந்து ரசிகர்கள் உருவாகி அனைத்து ரசிகர்களும் எந்த நாடு ஜெயித்தது, யார் எத்தனை கோல் என்று பேசிக் கொள்ளும்போது, எனக்கும் அந்த ஆசை வந்து நானும் தீவிர ரசிகனாகி விட்டேன், கால்பந்துக்கல்ல - வாகா வாகா ஷகீராவுக்கு.

கீழே உள்ள பாடல் உலகக் கோப்பை கால்பந்துக்காக ஷகீராவால் பாடப்பட்டாலும், இந்த வலைப்பூ அமர்க்களமாக ஆரம்பிக்க அக்கா ஷகீராவால் மீண்டும் ஒருமுறை உங்களுக்காக பாடப்படுகிறது. சும்மா லாஜிக்கல்லாம் பார்க்கப்படாது. பாட்டை மட்டும் நவீன உலகத்திற்காக பாடப்பட்டதாக நினைத்துக் கொள்ளவும். Okயா?Sunday, July 25, 2010

அறிமுகம்

ல்லோருக்கும் வணக்கம்,

ஒரு பத்திரிக்கை துவங்கி அதை வெற்றிகரமாக நடத்துவதென்பது எல்லோராலும் முடியாது. நமது எல்லோர் மனதிலும் ஏதாவது எழுத வேண்டும் என்ற ஆசை, வெறி இருக்கும். சரி எழுதுவோம் என பத்திரிக்கைக்கு ஏதாவது எழுதி அனுப்பினால் போன வேகத்துக்கு திரும்ப நம்மிடமே வரும். திரும்ப திரும்ப எழுதி அனுப்புகின்ற பொறுமை நமக்கு இருக்காது. காரணம் நாமெல்லாம் ப்ரொஃபஷனல் எழுத்தாளர்களும் அல்ல.

இம்மாதிரி ஒரு சூழ்நிலையில் நமக்கெல்லாம் கிடைத்த ஒரு வரப்பிரசாதம்தான் இந்த வலைப்பூ சமாச்சாரம். இந்த வலைப்பூவில் எழுதும் அனைவரும் ப்ரொஃபஷனல் எழுதாளர்களோ அல்லது அமெச்சூர் எழுத்தாளர்களோ அல்ல என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் இந்த வலைப்பூவில் எழுதுபவர்களின் கதை, கவிதை, இலக்கியம், சினிமா, நகைச்சுவைகள் யாவும் எந்தவித ப்ரொஃபஷனல் எழுத்தாளர்களின் எழுத்துக்கோ அல்லது பிரபல பத்திரிக்கைகளின் தரத்துக்கோ எவ்விதத்திலும் சளைத்தது அல்ல.

வலைப்பூ எழுத்தாளர்கள் எல்லாம் தமது வேலையின் இடைப்பட்ட நேரத்திலோ அல்லது தமது குடும்ப வேலைகளுக்கு பின்னரோ வலைப்பூவில் தமது அனுபவங்களை பகிர்ந்துக்கொள்கிறார்கள். உலகம் இணையம், கணிணி என சுருங்கியபோது, வலைப்பூவினால் உலகம், உறவுகள், நண்பர்கள் என விரிவடைந்து வருவது ஒரு நல்ல விஷயம். இதிலும் நம் தமிழில் வலைப்பூக்கள் உலக மொழிகளில் ஆங்கிலத்துக்கு அடுத்தப் படியாக இருப்பது, தமிழ் மொழியாம் செம்மொழிக்கு ஒரு கூடுதல் பெருமை.

வலைப்பூக்கள் நம் அனுபவத்தை பகிர்ந்துக் கொள்ளும் களமாக இருந்தாலும் பல நேரங்களில் நல்ல ஆசானுமாக விளங்கி வருவது கண்கூடு. விளையாட்டாக எனக்கு இப்படி அறிமுகமான வலைப்பூக்கள், சரி நாமும் ஏதாவது பகிர்ந்துக் கொள்வோமே என ஆரம்பித்த துறை சார்ந்த பதிவான தமிழில் பங்குச்சந்தை நிலவரமும், எனது ஊர் நபர்களுக்காக ஆரம்பித்த கூத்தாநல்லூர் புரூனே ஜமாஅத்தும் ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளேயே இருக்க, சரி எல்லோருக்கும் ஏதாவது எழுதுவோமே என பங்குச்சந்தை வலைப்பூவில் மற்ற செய்திகள் எழுதியபோது நணபர் சுரேஷ் அவர்கள், “வேண்டாம் சார், பங்குச்சந்தைப்பற்றிய பதிவுகள் மட்டுமே இருக்கட்டும், வேறு எதுவும் இதில் எழுத வேண்டாம்” என்றதும் எனக்கும் சரியெனப்பட்டதால், எனது எழுத்து ஆசைகளுக்காக(?) ஆரம்பமானதுதான் இந்த நவீன உலகம் என்ற வலைப்பூ.

இந்த வலைப்பூவின் ஆசைக்கும் ஆரம்பத்துக்கும் காரணம் அபி அப்பா அடிக்கும் அமளிகளும், சித்திரக்கூடம் பப்புவுடன் அவரது தாயாரின் அனுபவ பகிர்வுகளும், சந்தைநிலவரம் அவர்களின் அறிவான பதிவுகளின் பரிமாற்றங்களும், பிரியத் தோழியின் கவிதைகள்/ கதைகளும், குப்பைத்தொட்டியின் சமுக பதிவுகளும், புதுகைத் தென்றலின் தென்றலாக வீசும் பதிவுகள், புழுதிக்காட்டின் கலக்கல் பதிவுகளும், ப்ரியமுடன் வசந்தின் வித்தியாசமான பதிவுகளும், வால்பையனின் வால்தனமாக ஆரம்பித்தாலும் சீரியசாக முடியும் பதிவுகளும், படியுங்கள்! சுவையுங்கள்!! பதிவுகளும் இன்னும் விடுபட்ட பதிவு நண்பர்களின் பதிவுதான் இந்த வலைப்பூவை துவங்க காரணம்.

ஆதலால் நான் ஆரம்பித்துவிட்டேன், உங்களுக்கும் வேறு வழி இல்லை படித்துதான் ஆக வேண்டும். மேட்டர் இல்லாமல் மீட்டர் ஓடாது என்பது எனக்குத் தெரியும். ஆகவே அடிக்கடி மேட்டரோடு உங்களை அவ்வப்போது சந்திக்கிறேன். எல்லா பதிவாளர்களுக்கும் கொடுத்த வாய்ப்பையும், அன்பையும், ஆதரவையும் இந்த நவீன உலகத்துக்கும் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகிறேன்.

என்றும் அன்புடன்,
ஜாஃபர்.